க்ளைமாக்ஸில் குத்துப்பாட்டு கேட்கும் விஜய்


மெலடி கிங் வித்யாசாகர் கொஞ்ச நாட்களாக மூட் அப்செட்! அவர் மாய்ந்து மாய்ந்து போட்ட ஒரு ட்யூன் படமாக்கப்படுமா என்பது தெரியாமல் போனதால்தான் இந்த வாட்டம்.

விஜய் நடிக்கும் காவலன் படத்திற்கு வித்யாசாகர்தான் இசை. பொதுவாக விஜய்யுடன் இணைகிற இசையமைப்பாளர்கள் மெலடிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட, குத்து பாட்டு மீதுதான் குறி வைப்பார்கள். அப்போதுதான் விஜய்யும் திருப்தியடைவார். ஆனால் வித்தியாசாகர் போட்டிருக்கும் ஒரு ட்யூன் ரொம்ப ரொம்ப அற்புதம் என்று வியந்து புகழ்ந்தாராம் படத்தின் இயக்குனர் சித்திக்.

க்ளைமாக்சுக்கு ஒரு ரீல் முன்னதாக இந்த மெலடியை புகுத்த திட்டம் வைத்திருந்தார் சித்திக். ஆனால் தனது ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக அறிந்து வைத்திருக்கும் விஜய், இந்த இடத்துல மெலடி வந்தா எல்லாரும் தம்மடிக்க போயிருவாங்க. அதனால் அதை குத்துப்பாட்டா மாத்துங்க என்றாராம். அந்த இடத்தில் குத்துப்பாட்டு வைக்க சித்திக்குக்கு விருப்பம் இல்லை. அதனால் இதுவே இருக்கட்டும் என்றாராம். கடைசியில் தெப்பக் குளத்துல தீப்பெட்டி விழுந்த மாதிரி நமநமத்து போச்சு இரண்டு பேர் ஐடியாவும்.

‘அந்த சீன்ல பாட்டே வேணாம். விட்ருங்க’ என்று பிரச்சனையை முடித்து வைத்தாராம் எடிட்டர்!