இன்றைய தமிழ்சினிமா எப்படி இருக்கு-விஜய் ஓப்பன்டாக்!


“காவலன்” படத்தில் நடித்து முடித்துவிட்ட இளைய தளபதி விஜய் தற்போது “வேலாயுதம்” படத்தில் பி்ஸியாகவுள்ளார். பிரபல வார நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் இளைய தளபதி விஜய் ஸ்பெஷல் பேட்டியளித்துள்ளார். “தமிழ் சினிமாவை தொடர்ந்து கவனித்துவருபவர் நீங்கள், இன்றைய தமிழ்சினிமா எப்படி இருக்கிறது” என்ற நிறுபரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் விஜய்.

அவர் கூறியிருப்பதாவது :

ஷங்கர் சார்… சான்ஸே இல்லீங்க, ஒரு கிரியேட்டரா ரொம்ப நல்லா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். யார் வேணும்னாலும், எது வேணும்னாலும் நினைக்கலாம். ஆனால் அதை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவருவது என்பது ரொம்பகஷ்டம். அது வேறமாதிரி பொறுப்பு. ஷங்கர் சாரோட எல்லா படங்களிலும் அவர் நினைத்ததை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவந்துவிடுகிறார். அவரை நினைக்கும்போது ஒரு தமிழனா எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு.
அமீர்… அவர் டைரக்ட் பண்ண பருத்திவீரன் படம் வந்து கிட்டதட்ட 3 வருஷமாச்சு. ஆனா இன்னும் அவரோட பருத்திவீரன மறக்க முடியல. இந்தமாதிரி நல்ல படம் எடுத்தா அமீரை கொண்டாடலாம். நான் கொண்டாடுரேன். அடுத்து சசிக்குமார்… சுப்ரமணிபுரம்தான் அவருக்கு முதல் படம். ஆனா மிரட்டியிருப்பாரு சசி… சமீபத்துல இந்த மாதிரி முதல் படமே மிரட்டலா யாராவது பண்ணியிருக்காங்களான்னா… எனக்கு தெரியல.

தமிழ் சினிமாவில் திறமையானவங்க நிறையபேர் இருக்காங்க… எனக்கு எல்லோரையும் பிடிக்கும், என்ன… இவங்கள கொஞ்சம் அதிகமா பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார் தளபதி.