
ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அதில் எது அவரது மனசுக்கு பக்கத்தில் வந்து நிற்கிறதோ, அதுதான் அவரது அடுத்த படமாக இருக்கிறது.
எதிர்வரும் 15-ந் தேதி அவரது வேலாயுதம் படத்தின் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அதற்கும் அடுத்த படம் எது என்பதையும் முடிவு செய்துவிட்டாராம் விஜய்!
விஜய்யை இயக்கப் போகும் அடுத்த இயக்குனர் லிங்குசாமி. பையாவின் துள்ளல் லிங்குசாமிக்கு மீண்டும் ஒரு ராஜபாட்டையை திறந்துவிட்டிருக்கிறது.
பையாவை வாங்கி வெளியிட்ட கிளவுட் நைன் நிறுவனம்தான் விஜய்யின் இந்த படத்தையும் தயாரிக்க போகிறதாம்.