விஜய் ஜோடியாக அனன்யா


அனன்யா பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது. சுப்பிரமணியம் சிவா இயக்கும் சீடன் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்திருப்பதோடு, ராம்கோபால் வர்மாவின் உதவியாளர் அஜீத் இயக்கும் தமிழ்ப் படத்திலும் அனன்யா நாயகியாக ஒப்பந்தமாயிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கும் அஜீத், மூன்று மொழிகளிலும் அனன்யாவையே நாயகியாக நடிக்க வைக்க உள்ளாராம். தமிழில் விஜய் ஹீரோவாக நடிக்கலாம் என பேசப்படுகிறது.