ர‌ஜினி,கமலுக்கு அடுத்து…ப்ரூப் பண்ணிய விஜய்!


தமிழ் சினிமாவில் ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிகபடியான வியாபாரம் விஜய் படங்களுக்கு என்பது கத்துக்குட்டி சினிமா ரசிகனுக்கும் தெ‌ரியும்.

ஆனால் தற்போது தொடர் தோல்விகளுக்குப் பிறகு அவரது மார்க்கெட் வேல்யூ இறங்குமுகத்தில் இருப்பதாகச் சொல்வது உண்மையா என்றால் அதுதான் இல்லை.

விஜய் நடித்து அடுத்து வெளியாகவிருக்கும் படம் காவலன். இலங்கை பிரச்சினையில் சிக்கி பரபரப்புக்குள்ளான நடிகை அசின்தான் இதில் நாயகி. ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய மலையாள பட இயக்குனர் சித்திக் இயக்கியிருக்கும் படம் காவலன். மெகா அரங்குகள் போன்ற பிரமாண்டங்கள் இல்லாமல் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. அசின் நடித்திருப்பதால் படத்தை புறக்கணிப்போம் என்ற கோஷம் வெளிநாட்டில் பலமாகவும், உள்நாட்டில் பலவீனமாகவும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இருந்தும் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

சினிமா பேரடைஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் “காவலன்” படத்தினை வாங்கியிருக்கிறார். படத்தின் உரிமை மட்டும் நாற்பது கோடியே ஐம்பது லட்சத்திற்கு வாங்கியிருக்கிறார் ஷக்தி சிதம்பரம் ( மற்ற ரைட்ஸ்கள் இதில் அடங்காது… அது தனி).

இலங்கை செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையிலும், அசின் இலங்கையில் நடந்த இந்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் அசின் நடித்த படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என்று ஒரு அமைப்பு கங்கனம் கட்டிக்கொண்டு சுற்றுகிறது. அப்படியிருந்தும் இப்படியொரு லம்பான தொகைக்கு காவலனை ஷக்தி சிதம்பரம் வாங்கியுள்ளார். விஜய் படம் என்பதால் அசின் பிரச்சனையைப் பற்றியும் கவலைப்படாமல் காவலனை ஷக்தி சிதம்பரம் வாங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். காவலன் – தீபாவளி விருந்தாகத் திரைக்கு வரவிருக்கிறது.

யார் யாரோ… ஏதேதோ… பேசிக்கொண்டிருக்க… சைலண்டாக தன்னுடைய அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் தன்னுடைய கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார் இளைய தளபதி.

பல பிரச்சினைகளுக்கிடையிலும் ர‌ஜினி, கமலுக்கு அடுத்து தனக்கான இடம் இருப்பதை சைலண்டாக ப்ரூப் பண்ணியிருக்கிறது விஜயின் காவலன்.