ரசிகர்கள் முன்னிலையில் விஜய் தோன்றினார்


நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார். நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சி வந்த நடிகர் விஜய் “காவலன்” படம் திரையிடப்பட்டுள்ள துரைஸ் தியேட்டருக்கு வந்தார். அவரை தியேட்டர் உரிமையாளரும், பொள்ளாச்சி வர்த்தக சபை தலைவருமான ஜி.டி. பாலகிருஷ்ணன் மலர் கொடுத்து வரவேற்றார். பின்னர் விஜய் தியேட்ட ருக்குள் சென்று ரசிகர் முன் தோன்றினார். பட்டு வேட்டி, பட்டு சட்டையில் விஜய்யை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவரை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். நிறைய ரசிகர்கள் விஜய்யுடன் கைகுலுக்க முண்டியடித்தனர். சில ரசிகர்கள் விசில் அடித்து துள்ளி குதித்தனர். அவர்களிடம் காவலன் படம் பற்றி விஜய் கேட்டார். படத்தில் குத்துபாட்டு இல்லையே என்று சிலர் குறைபட்டனர். உங்கள் குறையை எனது அடுத்தபடமான வேலாயுதம் தீர்த்து வைக்கும் என்று விஜய் பதில் அளித்தார்.
மேலும் விஜய் பேசும் போது நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் வாங் கண்ணா... சொல்லுங் கண்ணா... என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான பாஷை எனக்கு மிகவும் பிடிக்கும் மற்ற ஊர்களில் படப்பிடிப்பின் போது கூட்டத்துக்காக ஜுனியர் நடிகர்களை பயன் படுத்துவோம்.


ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் தான் அந்த ஊர்மக்கள் ஜுனியர் நடிகர்களாக நடிப்பார்கள். பொள்ளாச்சி மக்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். உடனே ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் விஜய் நற்பணி மன்ற நகர தலைவர் குட்டப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அ.தி.மு.க.வினரும் விழாவில் பங்கேற்றனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த கண்ணாடி மணி, அருணா சலம், ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் சின்னு என்கிற முருகானந்தம் ஆகியோர் விஜய்யை சந்தித்து சால்வை அணிவித்தனர்