
"சுறா" ஒன்னும் சும்மால்ல. அஜித் சர்ச்சையின் கொந்தளிப்பு ஒருவழியாக கோடாம்பாக்கத்தில் அடங்கிப்போன நேரத்தில் காவி ரோமியோ நித்யானந்தாவின் லீலைகள் கோடாம்பாக்கத்தை குடைந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் சுறுசுறுப்பாக எழுபத்தைந்து சதவிகித படப்பிடிபை முடித்து அரசிய...ல் சுறாவாக சீறிவரும் விஜயின் சுறா படம் பற்றிய கில்லியான தகவல்கள் , நம்சினிமா ரசிகர்களுக்கு .... நடிகர் திலகத்துடன் விஜய் நடித்த 'ஒன்ஸ்மோர்' படத்திற்கு வசனம் எழுதியவர்தான் தற்போது சுறா படத்தை இயக்கி வரும் எஸ்.பி. ராஜ்குமார். அந்தப் படத்தின்போது விஜயுடன் ஏற்பட்ட நட்பின் காரணமாகவே 'சுறா'வை இயக்கும் வாய்ப்பை அவருக்குக் கொடுத்தாராம் விஜய். விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முணையாக அமைந்த 'காதலுக்கு மரியாதை படத்தின் தயாரிப்பாளர் சங்கிலிமுருகன்தான் 'சுறா'வை தயாரிக்கிறார். ஆனால் உண்மையான தயாரிப்பாளர் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் என்கிறார்கள். பாண்டிச்சேரி, கடலூர், சென்னை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், ஆகிய இடங்களில் சுறா படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரை படப்பிடிப்பு செய்த அணைத்து காட்சிகளையும் எடிட் செய்து விஜய்க்கு திரையிட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜகுமார். படம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருப்பதில் வியந்து, இயக்குநரை தட்டிக் கொடுத்திருக்கிறார் விஜய். விஜயுடன் முதன்முதலில் வடிவேலுவுக்கு அமைந்த வெற்றிகரமான காமெடி 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் அமைந்த்து. அதன்பிறகு 'போக்கிரி' . முன்றாவது சூப்பர் டூப்பர் காமெடியாக சுறா அமையும் என்கிறார் இயக்குனர். காரணம் 'சுறா'வில் வடிவேலுவின் காமெடி தனி ட்ராக் அல்ல. கதையோடு இணைந்த காமெடி மட்டுமல்ல, விஜயுடன் 30 காட்சிகளில் வடிவேலு வருகிறார். ஒரு சண்டைக்காட்சியில் விஜய்க்கு உதவுகிறார். அதுவே செம ரகளையாக இருக்குமாம். சரி...! சுராவின் கதை..? அங்கேதான் அரசியல் சூடு அணல் பறக்கிறது. ''என்ன நாடு இது.. ஏன் இப்படி எல்லாம் நடக்குதுன்னு உள்ளுக்குள்ளயே பொறுமுற உணர்ச்சிகரமான இளைஞர்கள் மக்கள் தொகையில அதிகம். ஆனா யதார்த்த வாழ்க்கை எதையும் தட்டிக்கெட்கிற தைரியத்த கொடுக்காது...என்ன நடந்தால் என்ன? நமக்கேன் வம்புன்னு பேசாமல் போயிடுவாங்க. ஒரு சிலர் கட்சி அரசியல இறங்கி கூட்டமா போராடுவாங்க. சுறா படத்தில் விஜய் இரண்டாவது ரகம். ஆனா அரசியல் அனுபவமும் விஜய்க்கு ஏமாற்றத்தைக் கொடுக்க அநியாயம் பண்றவங்களை சுறா மாதிரி தனியா நின்னு அழிக்கிறார என்பதுதான் கதை என்கிறார்கள் உதவி இயக்குனர்கள் தரப்பில்.. விஜய் ரசிகர்களின் அரசியல் ஆர்வத்தைத் தூண்டும் அரசியல் பன்ச் டயலாக்குகளுக்கு ஏற்ற கதை இது என்பதாலும், ஐம்பதாவது படம் என்பதாலும் படத்தில் பாலிடிக்ஸ் பஞ்ச்கள் அதிகம் இருக்கும் என்று உத்திரவாதமாய் சொல்கிறார்கள். . தற்போது பாடல் காட்சிகளுக்காக விஜய்யும், தமன்னாவும் ஊட்டி சென்றுள்ளனர். அமெரிக்காவில் இரண்டு பாடல்கள் படமாக்கப் போகிறார்கள். விஜய்க்கு அதிக ஹிட் பாடல்கள் கொடுத்த மணிசர்மா படத்திற்கு இசையமைத்து வருகிறார். போக்கிரி'யில் அசினுக்கு கிடைத்த கலகல பாத்திரம் போல இதில் தமன்னாவின் கேரக்டர், காமெடியில் வடிவேலை மிஞ்சும் என்கிறார்கள். மே மாதம் 10-ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு சுனாமி வேகத்தில் சுழன்று வருகிறது சுறா படக்குழு.