
சுறா ரிலிஸ் திகதி நெருங்க நெருங்க ரசிகர்களிடையே "சுறா" காச்சலும் அதிகரித்து வருகின்றது. விஜயை வைத்து வியாபாரம் செய்யும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள் போல, இப்பொழுது பதிவுலகமும் முழு மூச்சாக இறங்கியிருக்கிறது.
விஜய்க்கு ஆதரவாக ஒரு பதிவு வந்தால் ... எதிராக ஐந்து பதிவு வரும். காரணம்..... விஜயை பிடித்தவர்கள் மட்டும் விஜய்க்கு ஆதரவாகவும், விஜய் ரசிகர்கள் தவிர்ந்த மற்றவர்கள் ஒட்டு மொத்தமாக விஜயை எதிர்ப்பார்கள், அதற்கு காரணம் என்ன? வளர்ச்சி மீது கொண்ட பொறாமை.. விஜயை எதிர்ப்பதற்கு இருக்கும் ஒற்றுமை, எந்த நடிகருக்கும் எதிராக சேராது.
வேட்டைக்காரன் படம் வர முதலும், வந்த பிறகும் பதிவுகளாக எழுதித் தள்ளினார்கள்.
இதில் அரை பங்கு பதிவு கூட அசலுக்கு எதிராக வரவில்லை. சரி சொல்ல வந்த விசயத்துக்கு வாறன்.
சுறா படத்தின் மூலம் 'இளைய தளபதி' நிச்சயம் தனது மார்கட்டை நிச்சயமாக அதிகரிப்பார் என படத்துடன் சம்பந்தபட்ட தரப்பினர் கூறியிருப்பதாக இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. என்.கே . ஏகாம்பரமும், எம்.எஸ் .
பிரபுவும் சிறந்த முறையில் படப்பிடிப்புக்களை செய்திருப்பதாகவும் தமிழ் நாட்டின் அழகுகளை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார்கள் எனவும் செய்தி. (முதலில் சுறா கேமரா மென் ஆக எம்.எஸ் . பிரபுவும் பின் என்.கே . ஏகாம்பரமும் கடமையாற்றியது குறிப்பிட தக்கது).
இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கள் தூத்துக்குடி துறைமுக பகுதியில் நடைபெற்று வரும்போது வினோதமான, சந்தோசமான சம்பவங்கள் அங்கு இடம் பெற்றதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக இடங்களில் படம் பிடித்தது திருப்தி அளிக்காததால், பாதுகாப்பு துறையினரின் அனுமதி பெற்று உயர் பாதுகாப்பு வலயங்களில் சூட்டிங்கை நடத்துகின்றனர் படக்குழுவினர்.
துறைமுக அதிகாரிகள் மிகவும் அவதானமாக படப்பிடிப்புக்களை கண்காணித்து வருகின்றனர்.
விஜய் நடிக்கும் கட்சிகளை ஆர்வமாக பார்ப்பதாகவும், அவருடன் நிண்டு படமெடுப்பதில் துறைமுக அதிகாரிகள் விருப்பப்படுவதாகவும் செய்திகள் தெருவிக்கின்றன.
இது தான் விஜய்க்கிருக்கும் செல்வாக்கு. வேட்டைகாரனில் ஆரம்பக்காட்சிகளில் வந்த தூத்துக்குடியை விட மிகவும் அட்டகாசமாக காட்சி அமைப்புக்கள் படம் முழுவது இருக்கின்றதாம்,
இதே வேளை 'திருப்பாச்சியில்' இடம்பெற்ற 'கும்பிட போன தெய்வம்...' பாடலைப்போல் ஒரு பாடலை மணிசர்மா இசையில் எடுத்திருக்கிறார்கள்.
இதற்காக புதுச்சேரி அருகே நாற்பது லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து மூன்று மும்பை அழகிகளுடன் விஜய் ஒரு சுப்பர் குத்து ஆடியிருக்கிறார்.
ஏற்ற தாழ்வுகளால் விஜய் படங்களுக்கு முன்பில்லாத மவுசு கிடைத்திருக்கின்றது.
வடிவேல், இணைந்திருப்பதால் சுறா பட எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை தருவதில் எஸ்.பி. ராஜ்குமார் சிறந்தவர். நம்பிக்கை தரும் கூட்டணி அதிகரிப்பதால் வெற்றியும் உறுதிப்படுத்தப்படுகிறது.
ஐம்பதாவது படமாக சித்திரையில் வெற்றி நடை போட இருக்கின்றது சுறா.
என்னங்க ஒரு மாசம் தான் இருக்கு இப்பவே ஆரம்பியுங்களன் . ஓ.. பாட்டு வந்த பிறகு தான் தொடன்குவீன்களோ!